Following are some of the thoughts from my guru Shri.Vethathiri Maharishi...
To read about Vethathiri Maharishi's spiritual teachings on various topics, click here.. It will be very useful for our life..
உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்
உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
வாங்கும் கடனும் தேங்கும் பணமும்
வளர, வளர வாழ்வைக் கெடுக்கும்.
பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்
படைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ
இயற்கை மதிப்புகளை உணராத மக்கள் பிற உயிர்கட்கு
இழைக்கும் தீங்கே உலகத் துன்பமெலாம்.
இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்க
துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆராய்ந்துணர்வீர்.
வேண்டாத குணங்களை வடிகட்டி, வேண்டியவற்றிற்க்கு படிகட்டவேண்டும்.
ஒருவர் சிறந்தவர் என்பதை அறிந்து கொள்பவர்கள் அதை விட சிறந்தவர்கள்.
ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்து
ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.
உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்.
உணவிலே உலக ஒற்றுமை கண்டிடு,
உழைப்பினால் பதில் உலகுக்குத் தந்திடு.
உணவை உண்போம் நாள் தோறும்.. உடலாய் அதனை மாற்றுவது யார்?
கணமும் நம்மைப் பிரியாமல் கருத்தாய் இருந்து ஊக்குவது யார்?
அதுதான் கடவுள், இயற்கை, தெய்வம்.
உள்ளதை உணர்தல், நல்லதை செய்தல்,
அல்லதை விடுதல் ஆன்றோர் செயல்.
உறக்கம், உழைப்பு, உடை, உணவு, இவைகளில் எவற்றையும்
மறப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம் அறியாதோர் செய்கையாம்.
ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள்,
உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.
ஒற்றுமைக்கு எல்லையுண்டு என்று சொன்னால்
வேற்றுமைக்கு வித்தன்றோ ஆராய்ந்து தேர்வீர்.
கடமையை உணர்ந்திடு, காலத்தில் செய்திடு,
உடம்புக்கும் நல்லது, உள்ளமும் அமைதியாம்.
கதிரவன் காலத்தே காணாத விண்மீன் போல்
புதிர் போன்ற அறிவு நிலை புலன் இயங்கும்கால் தோன்றா.
சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்
சிந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு.
சினம், கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.
பணத்திற்கும் பண்புக்கும் நடக்கும் போட்டியால்
குணத்தில் மனிதர்கள் குறைந்தோராகின்றார்கள்.
பறை ஒலியால் சங்கீதம் பயனற்றுக் காண்பதை போல்
குறை காண்போர் அறிவில் நற்குணங்கள் பயனற்றிருக்கும்.
பிறப்பு, இறப்பு நடுவே பூவுலக வாழ்வு இதை
மறந்த நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.
பிறர் இன்புறக் கண்டுத் தான் இன்புறுவதே
பிழையில்லாச் சலிப்பில்லாப் பேரின்பமாகும்.
அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு.
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.
உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை
நடையில் கண்ணியம் நல்லோர் பண்பு.
உணவில் எளிமை, உழைப்பில் கடுமை
ஒழுக்கத்தில் உயர்வு உத்தமர் இயல்பு.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினால்
உள்ளொளித் தீயாகி உடலைக் கெடுத்திடும்.
உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய்
நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.
செயலிலே விளைவாக தெய்வ ஒழுங்கமைப்பிருக்கப்
பயனென்ன தவறிழைத்து பரமனைப் பின் வேண்டுவதால்.
செல்வத்திற்கே மதிப்பு, மனிதர்க்கில்லை
செல்வத்தால் அதை உடையோர் உயர்ந்து காண்பார்.
குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.
சினம், கவலை எனும் இரண்டும் மனிதர் வாழ்வைச் சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்து கொள்வீர்.
தப்புக் கணக்கிட்டுத் தானொன்றை எதிர்பார்த்தால்
ஒப்புமோ இயற்கை விதி? ஒழுங்கமைப்பிற்கேற்றபடி
அப்போதைக்கப்போதே அளிக்கும் சரிவிளைவு
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதையுணரார்.
Related Websites:
(You can also visit the forum in this site (www.vethathiri.org) under "Spiritual Discussions" link to read more...)
(It has many useful informations. Visit the website for further info about www.sky-yogacentre.org)