Ramesh's Site

Truth Alone is Permanent..!

எனது சிந்தையில் தோன்றியவை..

அன்பு குரு அருள்தந்தை வேதாத்திரி மரிஷி அவர்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கிவிட்டார். கீழே கூறி உள்ளவை, அவரின் அன்பால் எனது மனதில் உதித்த சில வரிகள்.. அவ்வளவே.. சிந்தையில் தோன்றுவதை பதிவு செய்து வைப்போமே என்ற நோக்கில் இங்கே பதிவு செய்துள்ளேன்.  இவை என்னை மேம்படுத்திக்கொள்ள உதவின. தோன்றிய கருத்தின்படி வாழ்க்கை மேற்கொண்டபோது நன்மைகள் பல அடைந்தேன். பிறருக்கு அறிவுரை கூற எழுதி உள்ளதாக எண்ணிவிடவேண்டாம்.  அருள்தந்தை வேதாத்திரி மரிஷி அவர்களின் தத்துவத்தின் படி வாழ்க்கை வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்..

 

Truth Alone is Permanent & the one which is permanent is the Truth

 

One of the simplest formula to stay happy ever is "Accept Everything"

 

Nature Never Makes Mistake. Accepting and Respecting its Decision depends on our Mindset

 

22.10.2006

நன்னிலைக்கு மாறுவது அறிவின் வளர்ச்சி
அம்-மாற்றத்தில் நிலைப்பது அறிவின் முதிர்ச்சி.

 

04.10.2004

இயன்ற அளவு பிறரை பாராட்டினால்
இன்முகமே நிலைத்து நிற்கும்

 

23.09.2004

குறைவில்லாமல் கொடுத்து கொண்டிருப்பவன் இறைவன் னால் அதில்

குறை கண்டு கெடுத்து கொண்டிருப்பவன் மனிதன்.

 

17.06.2005

இறைநிலையோடு மனதை இணைத்து அறவாழ்க்கை  வாழ்பவனுக்கு

வாழ்வில் கேட்டது கிடைக்கும், நினைத்து நடக்கும்னால்,

அந்நிலையில் அவனுக்கு எதுவும் தேவைப்படுவதில்லை.

அவனது தேவைகளை இயற்கை பூர்த்தி செய்யும்.

 

26.10.2006

என்று நாம் உணர்ந்த இறைநிலையை தெளிவாக விளக்க முடியவில்லையோ

அன்றே உண்மையான இறைநிலையை உணர்ந்த நாள்.

 

23.11.2006

குழந்தையே எனினும் தீ சுடாமல் விடுமோ!

பணம் என்பதால் மண் அரிக்காமல் விடுமோ!

இயற்கையோடு ஒன்றிணைந்து இயற்கையை மதித்து

இயற்கை போன்ற நெறிபிறழா வாழ்க்கை வாழ்வோம்.

 

04.12.2006

தெரிந்த தீய விளைவை எண்ணி வருந்த வேண்டம்.

தெரிந்தே தீய வினையை புரிதலும் வேண்டாம்.

 

09.12.2006

உன்னை சிறந்தவனென்று நீ நினைத்துக்கொள்.

நீயே நினைக்காத போது பிறர் எவ்வாறு நினைப்பர்!

உன் நினைப்பு தன்முனைப்பு ஆகாமல் பார்ப்பது முக்கியம்

நீ சிறந்தவன் என்பதை உன் செயலில் காட்டிடு.

 

21.12.2006

உனக்கு ஏற்படும் துன்பத்தை ரசிக்க பழகு.

அதிலுள்ள தத்துவத்தை புரிந்துகொள்.

வாழ்வே இன்பமயம் என்பது புரியும்.

 

10.01.2007

இன்பம் மட்டுமே வாழ்வில் வேண்டும் என்ற மாயையில்

அமைதியே பேரின்பத்திற்கு வழி என்பதை

மறந்து விடுகின்றனர், தன்னிலை விளக்கம் பெறாதோர்.

 

31.05.2007

வாழ்வில் வேகம் முக்கியமல்ல. முழுமையே முக்கியம்

 

 27.10.2006

மின்னலும் இடியும் ஒருசேர தோன்றிய போதிலும்
மின்னலை முதலிலும் இடியை பிறகும் உணர்கிறோம்
மின்னல் வந்ததும் இடி வருவது உறுதி, அது போலவே
செயல் விளைவு தத்துவமும், ஆராய்ந்து உணர்வோம்.

 

17.08.2005

தோற்றங்கள் அணைத்தும் அடையாளம் கண்டு கொள்ளவே!
உள்ளிருக்கும் மெய்ப்பொருளோடு ஊடுருவி உண்மை அறிவோம்!
மனிதருக்கும் இதுவே பொருந்தும்

 

23.09.2004

எனது குருவின் போதனையின்படி
குறை கூறும் பழக்கத்தை விட்டேன்
குறைவில்லா இன்பத்தை உணர்ந்தேன்
சமுதாயத்தில் நட்புறவு மேலோங்கியது..